100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
நடிகர்கள் ராகவா லாரன்ஸ், குக் வித் கோமாளி பாலா ஆகிய இருவரும் தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள். சமீபத்தில் கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்து உதவி செய்த அவர்கள், தற்போது கண் பார்வை இழந்த ஒரு சிறுவனின் சிகிச்சைக்கு பண உதவி செய்துள்ளார்கள். இதுகுறித்து நடிகர் பாலா ஒரு வீடியோவை இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், மாதேஸ்வரன் என்ற சிறுவனுக்கு விபத்து ஒன்றில் சிறு வயதிலேயே கண் பார்வை போய்விட்டது. அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய பெற்றோரிடம் பணம் இல்லை என்பதால் அந்த சிறுவனுக்கு மீண்டும் கண் பார்வை கிடைப்பதற்காக நானும், ராகவா லாரன்ஸூம் இணைந்து அறுவை சிகிச்சைக்கு பண உதவி செய்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார் பாலா. அவர்களின் இந்த நற்சேவைக்கு பாராட்டுகள் குவித்து வருகிறது.