தினசரி லப்பர் பந்து நாயகியின் காலை தொட்டு வணங்கும் கணவர் | சுந்தரி நடிகைக்கு திடீர் திருமணம் | இயக்குனரின் படமாக இருக்குமா ரஜினியின் 'வேட்டையன்'? | ஹிந்தி பிக்பாஸில் முதல் தமிழ் போட்டியாளராக நுழைந்த சூர்யாவின் கதாநாயகி | மொட்டைத்தலையுடன் கோலங்கள் ஆனந்தி! என்னாச்சு அவருக்கு? | உங்களால் எனக்கு ஏற்பட்ட ரூ.1 கோடி நஷ்டம் : பிரகாஷ்ராஜை விளாசிய தயாரிப்பாளர் | உலக சாதனை புத்தகத்தில் நடிகர் அஜித்தின் நிறுவனம் | ‛தெறி' பட ஹீந்தி ரீ-மேக்கில் சல்மான் கான் | நவராத்திரி : துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பிரதிபலித்த ஏக்தா ஜெயின் | வெப் சீரியல் இயக்கும் நடிகை ரேவதி! |
பொன்னியின் செல்வன், லியோ படங்களில் நடித்த பிறகு அரை டஜன் புதிய படங்களில் கமிட்டாகி நயன்தாராவை பின்னுக்கு தள்ளி இருக்கிறார் த்ரிஷா. அதோடு, 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த த்ரிஷா புதிய படங்களில் நடிப்பதற்கு 12 கோடி ரூபாயாக உயர்த்திருக்கிறார். இப்படி த்ரிஷா சம்பளத்தை உயர்த்தி விட்டதை அடுத்து நயன்தாராவும் புதிய படங்களில் நடிப்பதற்கு 12 கோடி சம்பளம் கேட்டு வருவதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.
ஹிந்தியில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த ஜவான் படம் வெற்றி பெற்றபோதும் தமிழில் நயன்தாரா நடித்த இறைவன், அன்னப்பூரணி போன்ற படங்கள் தோல்வி அடைந்தன. அதையடுத்து மண்ணாங்கட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் திடுதிப்பென்று 12 கோடியாக சம்பளத்தை அவர் உயர்த்தி விட்டிருப்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.