'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர் ரஜினிகாந்தை போலவே அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியும் தீவிரமான ஆன்மீகவாதியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். கடைசியாக இவர் இயக்கிய லால் சலாம் படத்தின் படப்பிடிப்பை திருவண்ணாமலையில் தொடங்கியவர் இறுதிக்கட்டப் படப்பிடிப்பையும் அங்கு தான் நடத்தி முடித்தார். அதோடு, திருவண்ணாமலை, காஞ்சி காமாட்சி அம்மன், காசி உள்ளிட்ட பல பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கும் தொடர்ந்து ஆன்மீக பயணம் சென்று வந்த ஐஸ்வர்யா ரஜினி, அது குறித்த புகைப்படங்களையும் எனது சோசியல் மீடியாவில் வெளியிட்டார்.
இந்நிலையில் தற்போது ஓம் நமச்சிவாயா என்று பேப்பரில் பலமுறை எழுதிய புகைப்படத்தை அவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். அதோடு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் மற்றும் இன்னும் சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். அதோடு, ‛மார்ச் மாதம் முழுவதும் பாசிட்டிவ்வாக மட்டுமே பறந்து போனது' என குறிப்பிட்டுள்ளார்.