'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சுகுமார் இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. இப்படம் இந்த வருடம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது.
ஆனால், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'கல்கி 2898 ஏடி' படம் மே 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மே 13ம் தேதி ஆந்திரா, தெலங்கானாவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம் என தகவல் வெளியானது. ஆகஸ்ட் 15ல் இப்படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சொன்னார்கள். அதனால், 'புஷ்பா 2' படமும் தள்ளிப் போகலாம் என தகவல் பரவியது.
இந்நிலையில் நேற்று 'புஷ்பா 2' படக்குழு படத்தின் புரமோஷன் ஆரம்பம் பற்றிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. அதில் படத்தின் 15, ஆகஸ்ட், 2024 என்று குறிப்பிட்டு வெளியீட்டுத் தேதியில் எந்தமாற்றமும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளார்கள்.
ஏப்ரல் 5ம் தேதி இப்படத்தின் கதாநாயகி ராஷ்மிகாவுக்கும், ஏப்ரல் 8ம் தேதி கதாநாயகன் அல்லு அர்ஜுனுக்கும் பிறந்தநாள் வருகிறது. அதை முன்னிட்டு சில பல அப்டேட்டுகள் வெளியாகலாம்.