'ரெட்ரோ' : ரெமான்ஸ் படமாம், ஆக்ஷன் படம் இல்லையாம்… | ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் |
ஆனந்தி நடித்து முடித்துள்ள படம் 'மங்கை'. இதனை குபேந்திரன் காமாட்சி என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். ஹீரோயின் சப்ஜெக்ட் படமான இதில் ஆனந்தி சோலோ ஹீரோயினாக நடித்துள்ளார் அவருடன் ஷிவின் கணேசன், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சமீபத்தில் போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் தயாரித்திருந்தார். இதனால் இந்த மாதம் வெளியாகவிருந்த படம் வெளிவரவில்லை. இப்போதைக்கு வெளிவரும் சாத்தியமும் இல்லை.
இந்த நிலையில் ஆனந்தி நடித்துள்ள மற்றுமொரு படமான 'ஒயிட் ரோஸ்' வருகிற ஏப்ரல் 5ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பூம்பாரை முருகன் புரடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கி உள்ளார். ஆனந்தியுடன் விஜித், பேபி நக்ஷத்திரா, சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார். சுதர்ஷன் இசையமைத்துள்ளார். மங்கையை எதிர்பார்த்து காத்திருந்த ஆனந்திக்கு ஒயிட் ரோஸ் ஆறுதல் தருமா என்பது பட வெளியீட்டுக்கு பிறகு தெரிய வரும்.