'ரெட்ரோ' : ரெமான்ஸ் படமாம், ஆக்ஷன் படம் இல்லையாம்… | ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் |
பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள 'ஆடுஜீவிதம்' படம் வரும் மார்ச் 28ம் தேதி இந்த படம் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே அதிக அளவில் படங்களில் நடிக்காத அமலாபால் ஆடுஜீவிதம் படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார்.
இதில் அரேபியாவில் ஒட்டகம் மேய்க்கும் வேலை செய்யும் பிரித்விராஜின் மனைவியாக அமலாபால் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் சமீபத்தில் கூறும்போது, “இந்த படம் ஆரம்பித்த சமயத்தில் நான் நடித்தபோது கர்ப்பமாக நடிக்கும் காட்சிகளில் அதற்கான பேட் அணிந்து கொண்டு நடித்தேன். ஆனால் இந்த படம் இப்போது வெளியாகும் போது நிஜமாகவே நான் கர்ப்பமாகி இருக்கிறேன். அதனாலேயே இந்த கர்ப்ப காலத்திலும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறேன்” என்று கூறியுள்ளார்.