தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
தமிழில் சைத்தான், கன்னி ராசி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அருந்ததி நாயர். திருவனந்தபுரத்தில் வசித்து வரும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினார். தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடி வருகிறார். இவருக்கு அடுத்ததாக மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ செலவுகளுக்காக அருந்ததி நாயரின் குடும்பம் மிகப்பெரிய அளவில் சிரமப்படுவதாகவும் இதற்காக அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பண உதவி தேவைப்படுவதாகவும் மலையாள திரை உலகை சேர்ந்த ரம்யா ஜோசப் என்கிற நடிகை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதுவரை திரையுலகத்தில் இருந்து யாரும் அருந்ததியின் மருத்துவ செலவிற்காக நிதி உதவி செய்யவில்லை என்பதுடன் ஒருவர் கூட அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கடந்த ஐந்து நாட்களாக விசாரிக்க கூட இல்லை என்று தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் ரம்யா ஜோசப்.