வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

குஷி படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட படப்பிடிப்புகளுக்கு ஒரு வருட இடைவெளி கொடுத்த நடிகை சமந்தா, வெளிநாட்டு சுற்றுலா பயணங்கள் மற்றும் உள்நாட்டுக்குள் ஆன்மிக தலங்களுக்கு சுற்றுப்பயணம் என தான் விரும்பியபடி பொழுதைப் போக்கி வருகிறார். இந்த நிலையில் சமந்தா நடிக்க இருக்கும் சிட்டாடல் என்கிற வெப் சீரிஸ் அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது. ராஜ் மற்றும் டி கே இணைந்து இயக்கும் இந்த வெப் சீரிஸ் மட்டுமல்லாது அமேசான் பிரைம் நிறுவனம் தயாரிக்கும் பல தயாரிப்புகளின் அறிமுக நிகழ்வும் ஒரே சமயத்தில் நடந்தது.
இந்த நிகழ்வில் நடிகை சமந்தா மட்டுமல்லாது தமன்னா மற்றும் அவரது காதலர் என்று கிசுகிசுக்கப்படுன்ற விஜய் வர்மா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அப்போது தமன்னாவுடன் இணைந்து ஆவலாக புகைப்படம் எடுத்துக் கொண்டார் சமந்தா. இவர்களுக்காக புகைப்படக் கலைஞராக மாறிவிட்டார் தமன்னாவின் காதலர் விஜய் வர்மா. இந்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள சமந்தா, “நீண்ட நாட்களாக காத்திருந்த ஒரு சந்திப்பு அன்பு தமன்னாவுடன்..” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.




