'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

நடிகர் யோகிபாபு ஒரு பக்கம் பெரிய நடிகர்கள் படங்களில் காமெடி நடிகராகவும் இன்னொரு பக்கம் நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் கொண்ட படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அப்படி அவர் கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்தவகையில் அவர் தற்போது நடித்து வரும் படம் 'சன்னிதானம் PO'. தமிழ் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் கன்னடத்திலும் உருவாகும் இந்த படம் சபரிமலையை பின்னணியாக கொண்டு உருவாகி வருகிறது.
இந்தப் படத்தை அமுதா சாரதி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து கன்னட நடிகரான ரூபேஷ் ஷெட்டி என்பவரும் நடித்து வருகிறார். இதன் மூலம் முதன்முறையாக தமிழிலும் அறிமுகமாகிறார் ரூபேஷ் ஷெட்டி. யோகிபாபுவுடன் நடிப்பது குறித்த தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டுள்ள ரூபேஷ் ஷெட்டி கூறும்போது, “தமிழ் சூப்பர் ஸ்டார் காமெடி நடிகர் யோகிபாபுவுடன் தமிழில் எனது முதல் படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றதை பெருமையாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.




