ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
சினி
கிராப்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபால் எழுதிய இயக்கியுள்ள படம்
‛ஒத்த ஓட்டு முத்தையா'. கதையின் நாயகனாக காமெடி நடிகர் கவுண்டமணி
நடித்துள்ளார். முழு நீள அரசியல்-நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள
இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
சென்னையில்
உள்ள பரணி டப்பிங் ஸ்டூடியோவில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டப்பிங்
பணிகளில் பங்கேற்ற கவுண்டமணி, தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசி
அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தற்கால அரசியலை தனக்கே உரிய
பாணியில் நையாண்டி செய்யும் வேடத்தில் கவுண்டமணியும் அவருடன் நெருக்கமாக
பயணிக்கும் பாத்திரத்தில் யோகி பாபுவும் நடித்துள்ளனர். கவுண்டமணி ஜோடியாக
ராஜேஸ்வரி என்பவர் நடித்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சாய்
ராஜகோபால் கூறியதாவது: ‛‛'ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் கதையை கவுண்டமணி
அவர்களிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே
சம்மதம் தெரிவித்தார். கவுண்டமணிக்கும் யோகி பாபுவுக்கும் இடையேயான
கெமிஸ்ட்ரி மிக நன்றாக அமைந்திருக்கிறது. அவர்கள் வரும் காட்சிகள்
அனைத்தும் ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைக்கும். கவுண்டமணி-செந்தில்
நகைச்சுவை ஜோடிக்கு பிறகு கவுண்டமணி-யோகி பாபு கூட்டணி மிகவும்
பேசப்படும்''. இவ்வாறு அவர் கூறினார்.