தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி |

2022ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான 'முதலும் நீ முடிவும் நீ' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மீதா ரகுநாத். கடந்த வருடம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற 'குட்நைட்' படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இரண்டு படங்களில் மட்டுமே நடித்த நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். ஊட்டியைச் சேர்ந்த மீதாவுக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து மீதா, “எனது மொத்த இதயம்” எனப் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் பலரும் மீதாவுக்கு திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். நடித்தது இரண்டு படங்கள் என்றாலும் இரண்டிலுமே அவரது நடிப்பைப் பலரும் பாராட்டினார்கள். திருமணத்திற்குப் பிறகும் மீதா நடிப்பாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.