15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் |
பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு வெளியான தெலுங்குப் படம் 'ஹனுமான்'. பான் இந்தியா படமாக வெளிவந்த இந்தப் படம் அதே சமயம் வெளியான மகேஷ்பாவின் 'குண்டூர் காரம்' படத்தை விடவும் பெரும் வசூலைக் குவித்தது. 50 நாட்களைக் கடந்து ஓடி வரும் இப்படம் 300 கோடி வசூலைக் கடந்துள்ளது.
ஐதராபாத்திற்கு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை 'ஹனுமான்' படத்தின் தயாரிப்பாளர் நிரஞ்சன் ரெட்டி, இயக்குனர் பிரசாந்த் வர்மா, படத்தின் நாயகன் தேஜா சஜ்ஜா ஆகியோர் சந்தித்தனர். அமித்ஷாவுக்கு ஹனுமான் சிலை ஒன்றையும் பரிசாக அளித்தனர்.
படக்குழுவினர் தன்னை சந்தித்ததுபற்றி எக்ஸ் தளத்தில் அமைச்சர் அமித்ஷா வாழ்த்தியுள்ளார். “சமீபத்தில் வெளியான சூப்பர்ஹிட் படமான 'ஹனுமான்' படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா, திறமையான நடிகர் தேஜா சஜ்ஜா ஆகியோரை சந்தித்தேன்.
“பாரதத்தின் ஆன்மிக மரபுகளையும், அவற்றிலிருந்து தோன்றிய சூப்பர் ஹீரோக்களை வெளிப்படுத்தும் பணியையும் படக்குழுவினர் செய்துள்ளனர். குழுவின் எதிர்கால திட்டங்களுக்கும் எனது வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
“அமித்ஷா சாரை சந்தித்தது ஒரு முழுமையான மரியாதை. உங்களது அன்பான, கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சார்,” என படத்தின் நாயகன் தேஜா சஜ்ஜாவும், “உங்களைச் சந்தித்தது பாக்கியம் சார். உங்களின் அன்பான வார்த்தைகளும், ஊக்கமும் எங்களிடம் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தும்,” என படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மாவும் நன்றி தெரிவித்துள்ளனர்.