நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சமீபத்தில் மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் வெளியானது. கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் நண்பர்கள் குழுவில் ஒருவர், அங்கே உள்ள குணா குகைக்குள் தவறி விழுந்துவிட அவரை மற்ற நண்பர்கள் காப்பாற்ற போராடுவது தான் கதை. கேரளா, தமிழகம் என இரண்டு பகுதிகளையும் சார்ந்து இந்த கதை உருவாகியிருந்ததால் மலையாளத்தையும் தாண்டி தமிழிலும் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது தமிழக திரையரங்குகளில் அதிக எண்ணிக்கையில் இந்த படம் திரையிடப்பட்டு வருகிறது.
இங்கே தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இந்த படத்தை புகழ்ந்து பாராட்டிய வேளையில் பிரபல எழுத்தாளரும் ஷங்கர், மணிரத்னம், பாலா ஆகியோரின் படங்களில் ஆஸ்தான கதாசிரியராக பணியாற்றி வருபவருமான ஜெயமோகன், இந்த மஞ்சும்மேல் பாய்ஸ் படம் குறித்து கூறும்போது 'கேரள பொறுக்கிகள்' என்கிற வார்த்தையை பயன்படுத்தி கடுமையாக விமர்சித்து இருந்தார். இது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு நல்ல படைப்பை இந்த அளவிற்கு கடுமையாக விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன என்று பலரும் ஜெயமோகனின் கருத்துக்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
ஜெயமோகனின் இந்த கருத்து குறித்து பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் கூறும்போது, “ஜெயமோகன் இந்தப் படத்தின் மையக்கருத்தான நட்பு என்பதை பற்றி பார்க்கவே இல்லை. ஒரு பாட்டில் ஆல்கஹாலுக்குள் இந்த படத்தின் நல்ல கதையை அவர் அடைக்க முயற்சித்து இருக்கிறார். அது சரியானது அல்ல. ஜெயமோகன் இந்த படத்தை விமர்சித்திருப்பதன் உள்நோக்கம் என்ன என்கிற கேள்வி எனக்கும் எழுகிறது” என்று கூறியுள்ளார்.