ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

புதுச்சேரி மாநிலத்தில் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடல் மூட்டையால் கட்டி வாய்க்காலில் வீசப்பட்ட கொடூர செயலும் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்க தொடங்கி உள்ளன.
நடிகர் கமல்ஹாசன் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இருப்பவர், ‛‛ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம். போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம். #SayNoToDrugs'' என குறிப்பிட்டு இருந்தார்.
கமலின் இந்த பதிவை ரீ-டுவீட் செய்து பதில் அளித்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் இயக்குனர் லெனின் பாரதி, ‛‛எங்கே போகிறோம் என்று ஆராய்வதைப் போல்… கதாநாயக வழிபாட்டுச் சினிமாக்கள் மூலம் ஆணாதிக்கம், வன்முறை, போதை, வெற்றுப் பெருமை, வக்கிரம், குரூரம் என இளம் உள்ளங்களில் விஷ விதைகளை விதைத்து.. “எங்கே கூட்டி வந்திருக்கின்றோம்” என்று ஆராய வேண்டிய பொறுப்பும் சினிமாக்காரர்களுக்கு இருக்கிறது'' என பதிவிட்டுள்ளார்.