நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் -2 படத்தின் முக்கிய அறிவிப்பு! | சினிமாவை விட வெளியில் தான் பாதுகாப்பின்மையை உணர்கிறேன்: ஷ்ரத்தா ஸ்ரீநாத் | 18 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் பொம்மரிலு | பிளாஷ்பேக் ; போலீஸ் பெல்டால் தந்தையிடம் அடி வாங்கிய ராம்சரண் | நடிகையின் குற்றச்சாட்டுக்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவித்த நடிகர் ஆசிப் அலி | மெய்யழகன் சண்டைக்காட்சி பற்றி கார்த்தி உடைத்த சஸ்பென்ஸ் | நல்ல படத்தை மிஸ் செய்ததற்கு வருத்தப்படுகிறேன் - ரகுல் ப்ரீத் சிங் | ஓணம் வாழ்த்து எதிரொலி - கடும் விமர்சனத்தில் சிக்கிய விஜய்! | ராகவா லாரன்ஸின் 25வது படத்தை இயக்கும் தெலுங்கு பட இயக்குனர்! | அமரன் படத்தின் டப்பிங் பணிகளைத் முடித்த சிவகார்த்திகேயன்! |
சுந்தர். சி உடன் தலைநகரம் படத்தில் நடித்து பிரபலமானவர் ஜோதிர்மயி. அதன் பிறகு சபரி, நான் அவனில்லை, பெரியார் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், கடந்த 2004 ஆம் ஆண்டு நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு 2015 ஆம் ஆண்டு அமல் நீரத் என்ற மலையாள இயக்குனரை மறுமணம் செய்து கொண்டார். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வரும் ஜோதிர்மயி, சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். தற்போது தலைமுடி முழுவதுமாக நரைத்து தோற்றம் அளிக்கிறார் ஜோதிர்மயி. இது படத்திற்காக மாற்றப்பட்ட தோற்றமா அல்லது அவரின் நிஜத் தோற்றமா என்பது தெரியவில்லை. இந்த புகைப்படம் வைரலானது.