நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது 234வது படமாக 'தக் லைப்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் கமலுடன் இணைந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஜஸ்வர்ய லஷ்மி என பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் செர்பியாவில் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த படத்திலிருந்து திடீரென துல்கர் சல்மான் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், துல்கர் சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தக் லைப் படத்தின் சம்மந்தப்பட்ட அறிவிப்புகளை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கால்ஷீட் பிரச்னை தொடர்பாக அவர் விலகி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற நாட்களில் வெளியாகும் என்கிறார்கள்.