செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்கே சுரேஷ் நேற்று அவருடைய சமூக வலைத்தளத்தில் 'தென் மாவட்டம்' என்ற அவர் இயக்கி, நடிக்க உள்ள படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார். அதில் இசையமைப்பாளர் என யுவன் ஷங்கர் ராஜா பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. நேற்று மதியம் 12.42 மணிக்கு அப்பதிவைப் போட்டிருந்தார்.
மாலை 5.32 மணிக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, “பத்திரிகை, மீடியா ரசிகர்களுக்கு ஒரு தெளிவுபடுத்துதல்…. “தென் மாவட்டம்' என்ற படத்தில் நான் பணியாற்றவில்லை, அதற்காக யாரும் என்னை தொடர்பு கொள்ளவும் இல்லை,” என அந்த போஸ்டரைப் பகிர்ந்து பதிவிட்டிருந்தார்.
அதற்கு ஆர்கே சுரேஷ், “யுவன் சார்… நீங்கள் ஒரு படத்திற்காகவும், ஒரு லைவ் இன் கான்சர்ட்'டுக்காகவும் கையெழுத்திட்டுள்ளீர்கள். அதற்கான ஒப்பந்தத்தை பாருங்கள், நன்றி யுவன் சார்,” என பதிலளித்துள்ளார். அதோடு, 2022ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதியன்று யுவன், ஆர்கே சுரேஷ் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் கூடிய “ஸ்டுடியோ 9, யுவன் லைவ் இன் கான்சர்ட்... விரைவில்…,” என்ற பழைய பதிவொன்றின் ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளார்.
யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் வந்த 'மாமனிதன்' படத்தை ஆர்கே சுரேஷின் ஸ்டுடியோ 9 நிறுவனம்தான் வெளியீடு செய்திருந்தது.
யுவன், சுரேஷ் இடையிலான இந்த சர்ச்சையின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது விரைவில் தெரிய வரும்.