பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா | ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி | ஏவிஎம் சரவணனுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி | பிளாஷ்பேக்: 2 முறை படமான நல்ல தங்காள் கதை | ஏவிஎம் சரவணன் படத்தயாரிப்பை நிறுத்தியது ஏன்? |

2015ம் ஆண்டுக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த 'இறுதிச் சுற்று' படத்திற்கு சிறந்த படத்திற்கான சிறப்புப் பரிசு, சிறந்த நடிகருக்கான பரிசு, சிறந்த நடிகைக்கான சிறப்புப் பரிசு, சிறந்த இயக்குனருக்கான பரிசு, சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான பரிசு, சிறந்த பின்னணி குரல் பெண் ஆகிய விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த நடிகருக்கான பரிசு வென்ற நடிகர் மாதவன் அதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “இறுதிச் சுற்று திரைப்படத்திற்காக 2015ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதை எனக்கு வழங்கி கவுரவித்த தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் . மேலும் வெற்றி பெற்ற சக வெற்றியாளர்களான சுதா, ஜோதிகா, ரித்திகா, கவுதம் கார்த்திக், அரவிந்த்சுவாமி, ஜிப்ரான் மற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.