சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சிறிய படங்களை கண்டு கொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் : வசந்தபாலன் காட்டம் | பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல் | கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள் | திரிஷ்யம் 3 படத்துடன் மோதும் வாழ 2 | மரகத நாணயம் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் | விஜய் படம் எப்ப ரிலீஸ் : அஜித் படம் அறிவிப்பு எப்ப வரும் | தலைப்பு ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்' : ஆனா பேய் படமில்லையாம் | விஜய் சேதுபதி கைவசம் வரிசை கட்டும் படங்கள் | பொங்கல் படங்களில் வின்னர் எது? : 100கோடியை தாண்டுமா பராசக்தி |

‛குக்கூ' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜூ முருகன். ஜோக்கர் படத்தில் இவர் பேசிய அரசியல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து அவரது இயக்கத்தில் வெளிவந்த ஜிப்ஸி, ஜப்பான் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று தோல்வியை சந்தித்தது.
தோல்வியில் இருந்து மீள ராஜூ முருகன் தீவிரமாக தனது அடுத்த படத்திற்கான கதையில் ஈடுபட்டு வருகின்றார். சமீபத்தில் இவர் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. தற்போது கிடைத்த தகவலின் படி, இப்போது நாயகனாக நடிக்க அர்ஜுன் தாஸ் உடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.