ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' . சுருக்கமாக ‛தி கோட்' என அழைக்கின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய்யுடன் இணைந்து மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு மாத காலம் மட்டுமே மீதமுள்ளது. இந்த நிலையில் இப்படத்தை முதலில் ஜூன் மாதத்தில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு கொண்டு வருவதாக தகவல் வெளியானது. இப்போது கிடைத்த தகவலின்படி, இந்த படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.