செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த படம் 'சலார்'. பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. விமர்சன ரீதியாக பெரிதளவில் பேசப்படவில்லை என்றாலும் வசூல் ரீதியாக ரூ.650 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்த படத்தை இரண்டு பாகங்களாக தான் அறிவித்தனர். ஆனால் சலார் முதல் பாகத்திற்கு கிடைத்த சுமாரான வரவேற்பிற்கு பிறகு இரண்டாம் பாகம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்போது சலார் இரண்டாம் பாகத்திற்கான மீதமுள்ள படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் துவங்க உள்ளது. முதல்பாகத்தில் இருந்த குறைகளை சரி செய்யும் வகையில் சலார் 2 உருவாகிறதாம்.