விஜய்யின் கடைசி படம் ‛ஜனநாயகன்': பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | ‛‛நீங்க எல்லாரும் இல்லாம விருது கிடைத்திருக்காது'': பத்ம பூஷன் விருது பெற்றி ஷோபனா நெகிழ்ச்சி | ‛மஜா' பட இயக்குனர் ஷபி மறைவு | பெயரை சுருக்கும்படி நிர்ப்பந்தித்தார்கள் ; கவுதம் வாசுதேவ் மேனன் | லூசிபர் 3ம் பாகமும் இருக்கு ; தன்னை அறியாமல் அப்டேட் கொடுத்த பிரித்விராஜ் | முகராசி, ஆட்டோகிராப், 96 - ஞாயிறு திரைப்படங்கள் | நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி |
2024ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல பெரிய நடிகர்களின் படங்கள் வரப் போகிறது என புத்தாண்டு பிறந்த சமயத்தில் பலரும் ஆர்ப்பரித்தார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு வரப் போகிறது என அவர்களது ரசிகர்களும் கொண்டாட்டமாகவே இருந்தார்கள்.
ஆனால், இந்த வருடத்தின் இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் லாபகரமான வசூல் என எந்த ஒரு படமும் தரவில்லை. பொங்கலுக்கு வெளிவந்த தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள்தான் ஓரளவிற்கு பெரிய படங்கள். கடந்த மாதம் ஜெயம் ரவி நடித்த படம் மட்டுமே பிரபலமான நடிகர்கள் நடித்து வந்த படங்களாக இருந்தது. சில படங்கள் நான்கு வாரங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது என சிலர் சொன்னாலும் அந்தப் படங்களால் லாபமே இல்லை என்றும் புலம்புகிறார்கள்.
தற்போதைய சூழ்நிலையில் தியேட்டர்காரர்கள் தள்ளாட்டமான ஒரு சூழலையே எதிர்கொண்டுள்ளார்கள். வாராவாரம் வரும் புதிய படங்கள் இரண்டு நாட்கள் கூட தாக்குப் பிடிப்பதில்லையாம். பல தியேட்டர்களில் திரையிட படங்களே இல்லை. ஒரு சிலர் ரீ-ரிலீஸ் படங்களை வைத்து சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது 'மஞ்சும்மல் பாய்ஸ்' மலையாளப் படம் கொஞ்சம் காப்பாற்றி வருகிறது.
பன்னிரண்டு, பதினொன்றாம் வகுப்புகளுக்கு முழு ஆண்டுத் தேர்வு ஆரம்பமாகிவிட்டது. தேர்தல் பிரச்சாரங்களும் ஆரம்பமாகியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் வேறு. இவற்றையும் சேர்த்து எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதால் பல தியேட்டர்களில் பல காட்சிகள் 'பிரேக்' ஆகும் நிலையை சமாளிக்க வேண்டியுள்ளதாம்.
வரப்போகும் பெரிய நடிகர்களின் படங்கள் ஒரு புறம் இருக்கட்டும், இப்போதைய சூழலை சமாளிக்க அந்த பெரிய நடிகர்கள் என்ன செய்யப் போகிறார்கள் ?, என்ற கேள்வி திரையுலகத்தில் எழுந்துள்ளது.