ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து திரைக்கு வந்த படம் ஜெயிலர். 600 கோடி வசூல் சாதனை செய்த இந்த படம் மீண்டும் ரஜினியின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது. இந்த நிலையில் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினி, இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171 வது படத்தில் நடிப்பவர், அதன்பிறகு மீண்டும் நெல்சன் இயக்கும் ஜெயிலர்- 2 படத்தில் நடிக்கப்போகிறார்.
இந்த படத்தில் நயன்தாரா மற்றும் இன்னொரு பாலிவுட் நடிகையும் நாயகிகளாக நடிக்கிறார்கள். ரஜினியை பொருத்தவரை இரண்டாம் பாகங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டாதவர். அதனால் தான் தனது சூப்பர் ஹிட் படங்களான பாட்ஷா, சந்திரமுகி படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்து விட்டார். என்றாலும் ஜெயிலர் -2 படத்தில் அவர் நடிப்பதற்கு முக்கிய காரணம், இந்த படத்தின் கதை ஜெயிலர் பட கதையின் தொடர்ச்சி இல்லையாம். வேறொரு புதிய கதைக்களத்தில் ஜெயிலர் 2 என்ற பெயரில் உருவாக இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.




