பிளாஷ்பேக்: 3 மொழிகளில் படம் இயக்கிய ஸ்ரீப்ரியா | பிளாஷ்பேக்: வாழ்க்கை முழுக்க போராடிய வசந்தகோகிலம் | ஜப்பான் ரசிகர்கள் ரசித்து மகிழும் 'விக்ரம்' | விடியற்காலையில் நடந்த அகில் அக்கினேனி திருமணம் | தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' |
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி- திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் ‛96'. இந்தப் படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த 96 படத்தின் பாடல் ஒலிப்பதிவின் போது நடந்த ஒரு நிகழ்வை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார் பாடகி சின்மயி.
அவர் கூறுகையில், இந்த படத்தில் தென்றல் வந்து தீண்டும் போது என்ற பாடலை பாடும்போது ஏற்கனவே படமாக்கப்பட்ட அந்த காட்சிகளை திரையில் ஓட விட்டு, திரிஷாவின் உதட்டு அசைவுக்கு ஏற்ப, தான் பின்னணி பாடியதாக தெரிவித்திருக்கிறார். அப்படி அவரது உதட்டு அசைவுக்கு பாடுவது பெரிய சவாலாக இருந்தது என்றும் தெரிவித்திருக்கும் சின்மயி, அது குறித்த வீடியோவை வெளியிட்டு இதை பார்த்தாலே நான் அவர் உதட்டு அசைவுக்கு ஏற்ப எப்படி பாடியிருக்கிறேன் என்பதை புரிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார்.