இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் 'வெண்ணிலா கபடிக் குழு' படத்தில் 'பரோட்டா' காட்சியில் பிரபலமானதால் 'பரோட்டா' சூரி என்று அழைக்கப்பட்டு பிரபலமானார் சூரி. அதன் பின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து 'விடுதலை' படத்தின் மூலம் கதாநாயகனாகவும் உயர்ந்தார். 'பரோட்டா' சூரி இப்போது 'பட விழாக்களின்' சூரி என்று வளர்ந்து நிற்கிறார்.
கடந்த மாதக் கடைசியில் நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெற்ற 53வது சர்வதேச திரைப்பட விழாவில் சூரி நடித்த 'விடுதலை, ஏழு கடல் ஏழு மலை' ஆகிய படங்கள் திரையிடப்பட்டன. அதற்காக அப்படக் குழுவினருடன் அந்தத் திரைப்பட விழாவில் சூரி கலந்து கொண்டார்.
அடுத்து ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடைபெற்று வரும் 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சூரி நடித்துள்ள 'கொட்டுக்காளி' படம் திரையிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 15 முதல் 25 வரை இத்திரைப்பட விழா நடைபெறுகிறது. பிப்ரவரி 16ம் தேதி இப்படம் அங்கு திரையிடப்பட்டது. அடுத்து பிப்ரவரி 18, 19, 20, 25 ஆகிய நாட்களிலும் திரையிடப்பட உள்ளது. அதற்கான டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்பனையாகிவிட்டன.
இந்த விழாவில் கலந்து கொள்வது குறித்து சூரி, “உலக அரங்கில் கொட்டுக்காளி!! பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பன்னாட்டு பார்வையாளர்கள் படத்தை பார்த்து கொண்டாடியது பெரும் மகிழச்சி! நமது வாழ்வியலையும், தமிழ் சினிமாவையும் கடல் கடந்து கொண்டு வந்து சேர்த்த இயக்குநர் தம்பி வினோத்ராஜுக்கும், தம்பி சிவகார்த்திகேயனுக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.