ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா | பிளாஷ்பேக்: நட்சத்திர ஓட்டல்களில் படமான 'வேலைக்காரன்' | பிளாஷ்பேக்: சரித்திர படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்த கண்ணாம்பா | 2026 சினிமா நிலைமை இப்படி இருக்க போகிறது : திருப்பூர் சுப்ரமணியம் சொல்லும் அதிர்ச்சி தகவல் | கோவை தமிழ் பிடிக்கும்னு கிர்த்தி ஷெட்டி சொன்னது ஏன்? | ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! |

2014ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலை எதிர்த்து போரிட்டு மூன்று தீவிரவாதிகளைக் கொன்று பின் வீரமரணம் அடைந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன். அவரது பயோபிக் படமாக சிவகார்த்திகேயன் நடிக்க 'அமரன்' படம் தயாராகி வருகிறது.
இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வீடியோவுடன் வெளியிடப்பட்டது. படம் குறித்து மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் நெகிழ்சியான பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
“அமரன், முடிவற்றவன்… என்றும் என்னுள் நிறைந்துள்ள ஒரு பெயர். இதை எப்படிச் சொல்வது என்று நான் ஆயிரம் முறை யோசித்தேன். ஆனால், எப்போதும் போல என் இதயத்தை பேச அனுமதிப்பேன். ஒரு தசாப்தம் கடந்துவிட்டது.
இப்போது அவரது நினைவையும், தேசபக்தியையும் வெள்ளித்திரையில் நிரந்தரமாக்குவதற்கான நேரம் இது. படத்தை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்பதை மறுக்க முடியாது. ஆனால், இந்த உற்சாகம் என்றும் அழியாத துக்கம், எல்லையற்ற அன்பு மற்றும் மாறாத நம்பிக்கையுடன் கலந்திருக்கும்.
ஒரு தகுதியான காரணத்திற்காக மிகவும் விலையுயர்ந்ததை இழப்பது என்பதை அறிந்த எங்கள் குடும்பத்தினர் மற்றும் ஒவ்வொரு ஆன்மாவும் வலிமையிலும், துக்கத்திலும் நிற்கிறோம், ஜெய்ஹிந்த்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவரது பதிவுக்கு படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, “அமரன், அன்புள்ள இந்து ரெபேக்கா மேடம், என்னையும் எனது குழுவினரையும் நம்பியதற்கும், இவ்வளவு பெரிய பொறுப்பிற்கும் நன்றி. மேஜர் முகுந்த் வராதராஜன் சாரின் தன்னலமற்ற சேவைக்கும், உங்களுக்கும், உங்களது குடும்பத்தாருக்கும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்,” என பதிலளித்துள்ளார்.