நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா கதாநாயகனாக நடிக்க 'வாடிவாசல்' படம் பற்றிய அறிவிப்பை 2021ம் வருடம் ஜுலை மாதம் 16ம் தேதி அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டார்.
'ஜல்லிக்கட்டு' பற்றிய படமாக, சிசு செல்லப்பா எழுதிய நாவலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக உள்ளதாக சொல்லப்பட்டது. படத்திற்காக ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வாங்கி அதனுடன் பழகி பயிற்சி எடுத்தும் வந்தார் சூர்யா. 2022 தமிழ்ப் புத்தாண்டு அன்று கூட அந்தக் காளையைப் பிடித்துக் கொண்டு அவர் செல்லும் வீடியோவைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
இப்படம் கடந்த மூன்று வருடங்களாக ஆரம்பமாகாமல் இழுபறியில் இருந்து வருகிறது. அதற்கான காரணம் என்னவென்பதும் தெரியவில்லை. படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் சொல்லாத வரையில் தெரியப் போவதில்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக 'வாடிவாசல்' பற்றி பல்வேறு விதமான தகவல்கள் கோலிவுட்டில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சூர்யாவுக்குப் பதிலாக தனுஷ் நடிக்கப் போகிறார் என்றும், சூர்யா விலகிவிட்டார் என்றும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்றார்கள். ஆனால், குறுகிய காலத் தயாரிப்பாக 'அயலான்' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்த பின்தான் சுதா படத்தில் நடிக்கப் போகிறார் என்ற புதுத் தகவலும் வெளியாகி உள்ளது.
கடந்த சில வருடங்களாக சூர்யாவின் பட வரிசையில் குழப்பங்கள் நிலவி வருகிறது. அது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. 'வாடிவாசல்' படத்திற்கு வழி கிடைக்குமா, கிடைக்காதா என்பதை தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் வெற்றிமாறன் வெளிப்படையாக சொன்னால்தான் உண்மை என்ன என்பது தெரியும். காத்திருக்கும் ரசிகர்களை தவிக்கவிட மாட்டார்கள் என நம்புவோம்.