கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் |
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் திடீரென மறைந்தார். இலங்கையில் காலமான அவரது உடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு திரையுலகினரின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர் இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்தில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இளையராஜா குடும்பத்தில் உள்ள பெரியப்பா, சித்தப்பா மகன்கள், மகள்கள் அனைவருமே திரையுலகத்தில் உள்ளார்கள். நெருக்கமான பாசத்தில் இருந்தவர்கள். பவதாரிணியின் மறைவு அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பவதாரிணியின் சித்தப்பா கங்கை அமரனின் மகன் இயக்குனர் வெங்கட் பிரபு, பவதாரிணியின் பெரியப்பா மகள் காஸ்ட்டியூம் டிசைனர் வாசுகி பாஸ்கர் ஆகியோர் பவதாரிணியின் இழப்பு பற்றி அப்போதே அவர்களது கடும் துயரத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்.
இன்று பவதாரிணியின் பிறந்தநாள். அவரை நினைவு கூர்ந்து வெங்கட் பிரபு, “என் தங்கை பவதாரிணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீ நல்லதொரு இடத்தில் மகிழ்ச்சியாக இருப்பாய் என எங்களுக்குத் தெரியும்,” என இதயம் நொறுங்கிய எமோஜிக்களுடன் பதிவிட்டுள்ளார்.