'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் | வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ் |
ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு கடந்த மாதம் வெளியான படம் 'அயலான்'. இப்படத்தையும் 'கேப்டன் மில்லர்' படத்தையும் ஒரே நாளில் தெலுங்கில் வெளியிட அங்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால், இரண்டு படங்களின் வெளியீடும் ஜனவரி 26க்குத் தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினம் 'கேப்டன் மில்லர்' படம் மட்டும் வெளியானது. ஆனால், 'அயலான்' படம் வெளியாகவில்லை.
படத்திற்கு 'டிஐ' தொழில்நுட்பம் செய்து தந்த ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனத்திற்கு 'அயலான்' தயாரிப்பாளர் முழு தொகையையும் தராமல் பாக்கி வைத்ததால்தான் அவர்கள் தெலுங்கு பதிப்பு வெளியீட்டிற்காக நீதிமன்றத் தடை வாங்கியதாகத் தகவல் வெளியானது.
கடந்த வாரம் 'அயலான்' படத்தின் தமிழ் பதிப்பு ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், தெலுங்கு பதிப்பு ஓடிடியிலும் வெளியாகவில்லை. தியேட்டர் வெளியீடு பற்றிய எந்த ஒரு தகவலும் இதுவரையில் இல்லை. தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது.
தெலுங்கு வெளியீடு பற்றி எதுவும் சொல்லாமல் தமிழ் வெளியீட்டிற்காகவும், அதன் வரவேற்புக்காகவும் நன்றி தெரிவித்துள்ளார்கள். “எங்கள் குறிப்பிடத்தக்க பயணத்தை அரவணைப்புடனும், அன்புடனும் ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி. அயலான் - இதயங்களை வென்றவன்,” என 'நன்றி கார்டு' போட்டு முடித்துவிட்டார்கள்.