சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு |

சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதன் பிறகு இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, எப்ஐஆர், லால் சலாம் என பல படங்களில் நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமல்லாது தனது படங்களை தயாரித்தும் வருகிறார். இந்த நிலையில் தனது தம்பி ருத்ரா என்பவரையும் தன்னுடைய விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஹீரோவாக அறிமுகம் செய்கிறார். இந்தபடத்திற்கு ‛ஓஹோ எந்தன் பேபி' என பெயரிட்டுள்ளனர். காதல் கதையில் உருவாகும் இதில் நாயகியாக மிதிலா பால்கர் அறிமுகமாகிறார். புதுமுக இயக்குனர் கிருஷ்ண குமார் ரமா குமார் என்பவர் இயக்க, தர்புகா சிவா இசையமைக்கிறார். இது குறித்த தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால். படத்தின் பூஜையும் சென்னையில் விமரிசையாக நடந்தது.