தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார் நடிக்க கடந்த மாதம் சங்கராந்தியை முன்னிட்டு வெளியான படம் 'ஹனுமான்'. தெலுங்கில் தயாரான இப்படம் பான் இந்தியா படமாக வெளியானது. தெலுங்கிலும், ஹிந்தியிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
மகேஷ்பாபு நடித்து வெளிவந்த 'குண்டூர் காரம்' படத்தைக் காட்டிலும் இந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு தெலுங்கு ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. படம் வெளிவந்து 30 நாட்கள் ஆன நிலையில் 300 கோடி வசூலைக் கடந்து இன்னும் 300 சென்டர்களில் படம் ஓடுகிறது. இந்த 2024ம் ஆண்டில் இந்தியத் திரையுலகின் முதல் பெரும் வசூல் படமாக இந்தத் தெலுங்குப் படம் அமைந்துள்ளது.
2022ம் ஆண்டில் ஆன்மிகம் கலந்த படமாக வந்த கன்னடப் படமான 'காந்தாரா' படம் 400 கோடி வசூலை அள்ளியது. தெலுங்கில் ஆன்மிகப் படமாக வந்த இந்த 'ஹனுமான்' படம் தற்போது 300 கோடியைக் கடந்துள்ளது. வளரும் நடிகரான தேஜா சஜ்ஜா படத்திற்குக் கிடைத்த வரவேற்பு பல முன்னணி நடிகர்களை கொஞ்சம் பொறாமையிலும் தள்ளியிருக்கிறது.




