இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
தமிழ் சினிமா உலகில் வசூல் என்பதை உலக அளவில் கொண்டு சேர்த்த நடிகர் ரஜினிகாந்த். அவருடைய படங்கள்தான் வெளிநாட்டு வசூலை சாதனை புரியும் அளவிற்கு உருவாக்கிக் கொடுத்தவை. அந்த வழியில்தான் தற்போது விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்.
கதாநாயகனாக, இரண்டு ஹீரோக்களில் ஒருவராக, வில்லனாக, 171 படங்கள் வரை வந்துள்ளார் ரஜினிகாந்த். அவர் சில வினாடிகள், சில நிமிடங்கள் என கவுரவத் தோற்றத்தில் நடித்த படங்களின் வரிசையில் நாளை வெளியாக உள்ள 'லால் சலாம்' படமும் சேரப் போகிறது.
முன்பெல்லாம் கவுரவத் தோற்றம் என்றழைக்கப்பட்டது. பின்னர் அது சிறப்புத் தோற்றம் என்று அழைக்கப்படுகிறது. அந்த விதத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த சில படங்கள்…
பாவத்தின் சம்பளம் (1978)
தாயில்லாமல் நானில்லை (1979)
நட்சத்திரம் (1980)
நன்றி மீண்டும் வருக (1982)
அக்னி சாட்சி (1982)
யுத்த காண்டம் (1983)
உருவங்கள் மாறலாம் (1983)
சஷ்டி விரதம் (1983)
சித்திரமே சித்திரமே (1985)
யார் (1985)
கோடை மழை (1985)
மனதில் உறுதி வேண்டும் (1987)
பெரிய இடத்துப் பிள்ளை (1990)
வள்ளி (1993)
மற்ற மொழிப் படங்கள்…
அபராஞ்சி - கன்னடம் (1984)
நியாயம் மீரே செப்பாலி - தெலுங்கு (1985)
கிராப்தர் - ஹிந்தி (1985)
டாகூ ஹசினா - ஹிந்தி (1987)
கைர் கனூனி - ஹிந்தி (1989)
பாக்ய தேவதா - பெங்காலி (1995)
தமிழில் வெளிவந்த 'குசேலன்' படத்தில் ரஜினிகாந்த் நடித்ததை நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றம் என்று சொன்னார்கள். தெலுங்கில் நடித்த 'பெத்தராயுடு' படமும் அப்படித்தான் சொல்லப்பட்டது. நாளை வெளியாக உள்ள 'லால் சலாம்' படத்திலும் நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில்தான் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்று தெரிகிறது.