ஹிந்தி பட வசூலில் நம்பர் 1 சாதனை புரிந்த 'ஸ்திரீ 2' | தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை | ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியின் 4வது இசை வெளியீடு | மழைக்காலத்தில் சிக்குகிறதா 'கங்குவா'? | நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் |
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள 'லால் சலாம்' படம் நாளை தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாக உள்ளது. தெலுங்கில் ரஜினிக்கான பின்னணிக் குரலை நடிகர் சாய்குமார் கொடுத்துள்ளார்.
கடந்த பல படங்களாக ரஜினிக்கு பின்னணிப் பாடகர் மனோ தான் தெலுங்கில் டப்பிங் பேசி வந்தார். இந்நிலையில் அவருக்குப் பதிலாக இந்தப் படத்தில் சாய்குமார் பேசியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாய்குமார், ரஜினிக்காகப் பேசியுள்ளார். தெலுங்கில் இதற்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'பெத்தராயுடு, பாட்ஷா' ஆகிய படங்களுக்கு அவர்தான் டப்பிங். இந்த மாற்றம் ரஜினி ரசிகர்களுக்கு எப்படியான அனுபவத்தைக் கொடுக்கப் போகிறது என்பது நாளை படம் வெளிவந்ததும் தெரிந்துவிடும்.