எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
கொடி, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். தற்போது சூரி, சரத்குமார், உன்னி முகுந்தனை வைத்து ‛கருடன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் லெஜெண்ட் படத்தை அடுத்து சரவணன் நடிக்கும் படத்தை இவர் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. தனது புதிய படம் விரைவில் ஆரம்பமாகும் என்று சோசியல் மீடியாவில் சரவணன் செய்தி வெளியிட்ட போதும், அந்த படத்தை இயக்கப் போவது துரை செந்தில்குமார் என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை.
தற்போது சரவணன் படம் பற்றி துரை செந்தில் குமார் அளித்த ஒரு பேட்டியில், ‛‛சரவணனுக்கு நான் ஒரு கதை சொன்னேன். அது அவருக்கு பிடித்து விட்டதால் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்று கூறினார். அப்போது அந்த படம் குறித்து நான் ஒரு புதிய ஐடியாவை சொன்னேன். அந்த ஐடியாவும் அவருக்கு பிடித்ததை அடுத்து அது குறித்த சில வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம்'' என்று தெரிவித்து இருக்கிறார்.