விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! |
விஜய் டிவியில் குக் வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் ரக்சன். இவர் 2020ல் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் அவரது நண்பனாக ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதோடு, கன்னிவெடி, என் காதல் தேவதை போன்ற படங்களிலும் நடித்திருக்கும் ரக்சன், தற்போது மறக்குமா நெஞ்சம் என்ற ஒரு படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
பள்ளிப் பருவத்து காதல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை யோகந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். மாலினா, சரண்யா, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மறக்குமா நெஞ்சம் படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. இப்படம் பிப்ரவரி 2ஆம் தேதி திரைக்கு வருகிறது.