புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடித்துள்ள படம் ‛லால் சலாம்'. விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, அதில் மதம் சார்ந்த விஷயங்களை பற்றியும் இப்படம் பேச உள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். அடுத்தமாதம் படம் ரிலீஸாக உள்ள நிலையில் சென்னையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
விழாவில் பேசிய இயக்குனர் சவுந்தர்யா : ‛‛பொண்ணுக்கு கஷ்டம் என்றால் ஒரு அப்பா காசு, பணம் தருவாங்க. எங்கப்பா எனக்கு படம் கொடுத்துள்ளார். ரஜினி மகள் என்பதால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. அப்பாவை சங்கி என்று சொல்வது வருத்தமாக உள்ளது. ரஜினிகாந்த் சங்கி கிடையாது. இந்த படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும். அவர் சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் அவர் நடித்திருக்க மாட்டார். மனித நேயமிக்கவரால் மட்டும் தான் இந்த படத்தில் நடிக்க முடியும். அந்த தைரியம் அவருக்கு மட்டும் தான் உள்ளது. இதை கர்வமாக சொல்வேன்” என்றார்.