3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? | ஓடிடி.,யில் விலை போகாத 'கேங்கர்ஸ்' | வேலை நாட்களில் எடுபடாத விஜய்யின் சச்சின் | கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! |
பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் பொங்கலுக்கு தெலுங்கில் வெளியான படம் 'ஹனுமான்'. இப்படம் பான் இந்தியா படமாக மற்ற மொழிகளிலும் வெளியானது.
படம் வெளியான இரண்டு வாரத்தில் 250 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. சுமார் 40 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இவ்வளவு கோடி வசூல் சாதனை செய்திருப்பது சாதாரண விஷயமல்ல.
இந்த 2024ம் வருடத்தில் தெலுங்கில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் அதிக வசூலைக் குவித்த படமாகவும், அதிக லாபத்தைக் கொடுத்துள்ள படமாகவும் அமைந்துள்ளது.
தெலுங்கில் நேற்று வெளியாக வேண்டிய 'அயலான்' படம் வெளியாகாமல் போனதால் பல தியேட்டர்களில் மீண்டும் 'ஹனுமான்' படத்தைத் திரையிட்டுள்ளார்களாம். அதனால், இந்த வார இறுதி வசூலும் தெலுங்கில் நன்றாக இருக்கும் என்கிறார்கள். இதற்கடுத்து இப்படம் ஓடி முடியும் போது 300 கோடி வசூலைக் கடக்கவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.