நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் 'வாடிவாசல்' | ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! |
ஹிந்தியில் அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் சைத்தான். இந்த படத்தில் மாதவன், ஜோதிகா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். கடந்த 2001ம் ஆண்டு டும் டும் டும் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்த மாதவனும் , ஜோதிகாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் நடித்துள்ளார்கள். அதேபோல் 1997ம் ஆண்டு ஹிந்தி சினிமாவில் அறிமுகமான ஜோதிகா, அதையடுத்து வாலி படத்தில் தமிழில் அறிமுகமானவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போதுதான் சைத்தான் படம் மூலம் ஹிந்தியில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று டீசர் வெளியாகி இருக்கிறது. அதை பார்க்கும்போது, இந்த படம் ஒரு திரில்லர் கதையில் உருவாகி இருப்பது தெரிகிறது. அதோடு இந்த சைத்தான் படம் மார்ச் எட்டாம் தேதி திரைக்கு வர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விகாஸ் பால் என்பவர் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.