புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? | அபார்ட்மென்ட் வாங்கத் தவிக்கும் '3 பிஹெச்கே', அதைவிட்டு போகச் சொல்லும் 'பறந்து போ'!! | டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? |
எண்பதுகளின் இறுதியில் கங்கை அமரன் இயக்கிய 'எங்க ஊரு பாட்டுக்காரன்' என்கிற படத்தில் நடிகர் ராமராஜனுக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நிஷாந்தி என்கிற சாந்தி பிரியா. நடிகை பானுப்ரியாவின் சகோதரியான இவர் சில வருடங்கள் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகில் ஒரு ரவுண்டு வந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என போற்றப்படும் டாக்டர் சரோஜினி நாயுடு அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் படத்தில் சரோஜினி நாயுடு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தாராவி பேங்க் என்கிற வெப் சீரிஸிலும் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் சாந்தி பிரியா. வர்ஷா பரத் என்பவர் இயக்கும் இந்த படம் 25 வயதிலிருந்து 55 வயது வரையிலான ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது. “பொதுவாக முன்னாள் கதாநாயகிகள் மீண்டும் நடிப்பதற்காக வரும்போது அவர்களுக்கு அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திரங்கள் தான் கிடைப்பது வழக்கம். ஆனால் எனக்கு இந்த படத்தில் கதையின் நாயகியாக நடிப்பதற்காக வாய்ப்பு தேடி வந்ததால் மறுக்காமல் ஒப்புக்கொண்டேன்” என்று கூறியுள்ளார் சாந்தி பிரியா.