சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சமீபத்தில் நடிகர் வடிவேலு மற்றும் பஹத் பாசில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ள மாரீசன் என்கிற படத்தின் அறிவிப்பு வெளியானது. நிச்சயமாக இது ஒரு வித்தியாசமான கூட்டணி என சொல்லலாம். குறிப்பாக கடந்த வருடம் வெளியான மாமன்னன் படத்தில் வடிவேலு, பஹத் பாசில் இருவருக்குமான நடிப்பு போட்டியை பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது. கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கும் இந்த படம் ஒரு நடுத்தர வயது மனிதனும், ஒரு இளைஞனும் நாகர்கோவிலில் இருந்து பொள்ளாச்சி வரை சாலை பயணம் மேற்கொள்ளும்போது அவர்களுக்கு ஏற்படும் அனுபவத்தை மையப்படுத்தி உருவாகிறது என்று சொல்லப்படுகிறது.
கடந்த 2013ல் மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த 'நார்த் 24 காதம்' என்கிற படம் வெளியானது. இந்த படத்திலும் நடுத்தர வயது மனிதரான நெடுமுடி வேணுவுடன், யாரிடமும் சிரித்து பழகாத இளைஞரான பஹத் பாசில் எதிர்பாராத விதமாக ஒரு சாலை பயணத்தில் இணைந்து பயணிப்பார். அதன் பிறகு நடக்கும் நிகழ்வுகளும் எதிர்பாராமல் ஏற்படும் ஒரு பிரச்சனையை இவர்கள் ஒன்று சேர்ந்து எப்படி சமாளிக்கிறார்கள் என்பதும் தான் கதையாக சொல்லப்பட்டிருந்தது. ஒருவேளை அந்த படம் தான் மாரீசன் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறதா என்கிற சந்தேகம் ரசிகர்கள் சிலருக்கு எழுந்துள்ளது.