சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி. கார்த்திக்கு யோகி இயக்கி உள்ள இந்த படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றிருந்தது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலரில் ஈவேராவை விமர்சிக்கும் வகையில் ஒரு வசனம் இடம் பெற்றிருந்தது. கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு திரிந்த ராமசாமிதான நீ என்று ஒருவர் கேட்பதும், அந்த ராமசாமி நான் இல்லை என்று சந்தானம் சொல்வது போன்றும் அமைந்திருந்தது.
இந்நிலையில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த போதும் அந்த வசனத்தை பேசி வீடியோ வெளியிட்டிருந்தார் சந்தானம். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த வீடியோவை டெலிட் செய்தார். இதன் காரணமாக ஈவேராவை கிண்டல் செய்யும் படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதா? என்று திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.
இப்படியான நிலையில் சந்தானத்தின் பிறந்த நாளை ஒட்டி வடக்குப்பட்டி ராமசாமி படக்குழு ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெயர் இடம் பெறவில்லை. மாறாக, பீப்பிள் மீடியோ பேக்டரி மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாக வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் இருந்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியேறி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த படம் வருகிற பிப்ரவரி இரண்டாம் தேதி திரைக்கு வருகிறது.