ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்து மகர சங்கராந்தியை முன்னிட்டு தெலுங்கில் வெளியான படம் 'ஹனு மான்'. பக்தி கலந்த ஆக்ஷன் படமாக வெளிவந்த இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாது வட இந்திய ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. 175 கோடி வசூலைக் கடந்து படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தின் ஒவ்வொரு டிக்கெட் கட்டணத்திலிருந்தும் 5 ரூபாயை அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப் போவதாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி நன்கொடை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
“53,28,211 பேருக்கு நன்றி. அயோத்தி ராமர் கோவிலுக்காக நல்ல விஷயத்துக்காக ரூ.2,66,41,055 நன்கொடையாக வழங்க இணைந்ததற்கு நன்றி. இந்த சிறப்பான முன்னெடுப்பிற்கு ஹனுமான் படத்தைப் பார்த்து நீங்களும் ஆன்மிக அனுபவத்தைப் பெற்று பங்கெடுக்கலாம். உங்கள் டிக்கெட் கட்டணத்தில் 5 ரூபாயை அயோத்தி கோவிலுக்கு வழங்கலாம். இந்த சரித்திரப் புகழ் வாய்ந்த தருணத்தில் நாங்களும் பங்கெடுப்பது பெருமை,” என அவர்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.