அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு |
லைப் சைக்கிள் கிரியேஷன் சார்பில் பவன் மற்றும் அஜிஸ் ஆகியோர் தயாரிக்கும் படம் 'அரிமாபட்டி சக்திவேல்'. கரு.பழனியப்பன் உதவியாளர் ரமேஷ் கந்தசாமி இயக்கி உள்ளார். முக்கிய வேடத்தில் சார்லி நடித்துள்ளார். நாயகனாக புதுமுகம் பவன் நடிக்க, நாயகியாக மேகனா எலென் நடித்துள்ளார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, கராத்தே வெங்கடேஷ், ஹலோ கந்தசாமி, பிர்லா போஸ், அழகு, செந்தி குமாரி உட்பட பலர் நடித்து இருகிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் ரமேஷ் கந்தசாமி கூறியதாவது: திருச்சி அருகே ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமமே தங்களுக்கு என்று ஒரு கட்டுபாட்டை வரையறுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த ஊரில் உள்ள ஒருவன் அந்த கட்டுப்பாட்டை மீறும்போது நாயகனுக்கும், ஊருக்கும் நடக்கும் வாழ்வியல் போராட்டங்களை மையக்கருவாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அரியலூர் மற்றும் சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் படம் வெளிவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.