ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஷேன் நிகம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெயில் என்கிற படத்தில் அதிக சம்பளம் கேட்டு தயாரிப்பாளருடன் ஏற்பட்ட ஈகோ மோதலில் அந்த படம் முடிவடைவதற்கு முன்பாகவே அதில் நீண்ட தலைமுடியுடன் இருந்த தனது கெட்டப்பை மாற்றும் விதமாக முடியை வெட்டி அதிர்ச்சி அளித்தார் ஷேன் நிகம்.
இதைத் தொடர்ந்து அந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்து ஷேன் நிகமுக்கு மலையாள தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போடும் அளவுக்கு நிலைமை சீரியஸ் ஆனது. இதனால் தமிழில் ஒரு சில பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் இழந்தார் ஷேன் நிகம். குறிப்பாக கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பும், சீனுராமசாமி டைரக்ஷனில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பும் கைநழுவி போனது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஆர்டிஎக்ஸ் படத்தின் வெற்றி மூலம் மீண்டும் அவருக்கு தமிழில் இருந்தும் வாய்ப்புகள் வர துவங்கியுள்ளன. அந்த வகையில் ரங்கோலி படத்தை இயக்கிய வாலி மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் மெட்ராஸ்காரன் என்கிற படத்தில் கதாநாயகனாக தமிழில் அறிமுகமாகிறார் ஷேன் நிகம். இந்த படத்தில் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, சிரஞ்சீவி குடும்பத்தை சேர்ந்தவரும் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தவருமான நிஹாரிகா கொனிடேலா கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். மலையாளத்திலிருந்து தமிழுக்கு அறிமுகமாகி இன்று மிகப்பெரிய முன்னணி நடிகராக உயர்ந்துள்ள துல்கர் சல்மான் இப்படி ஒரு மலையாள நடிகரின் தமிழில் அறிமுக பட போஸ்டரை வெளியிடுவது பொருத்தமான ஒன்றுதான்.