மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
"விஸ்வரூம் - பார்ட் 2 திரைப்படம், டி.டி.எச்.,சில் வெளியிடுவதாக கூறப்படுவது பொய்யான தகவல் என, கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. "விஸ்வரூபம் படத்தை, நடிகர் கமல்ஹாசன், நடித்து, இயக்கி, தயாரித்து வெளியிட்டுள்ளார். பல தடைகளை தாண்டி, படம் வெளியிடப்பட்டு தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து, "விஸ்வரூபம்-பார்ட்-2 பட வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்தை, தியேட்டர்களிலும், டி.டி.எச்., மூலமாகவும் வெளியிட, கமல் முடிவு செய்துள்ளார் என்றும், இதற்காக டி.டி.எச்., நிறுவனங்களுடன், கமல் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து, கமலை தொடர்பு கொண்டபோது, அவரது உதவியாளர் பேசியதாவது: தியேட்டர்களில், "விஸ்வரூபம் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. "விஸ்வரூபம்- பார்ட் 2 பட வேலைகள் நடந்து வருகின்றன. படப்பிடிப்பும் இன்னும் நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்தப் பட வெளியீடு மற்றும் விநியோகம் குறித்து, யாருடனும் இதுவரை பேசவில்லை. டி.டி.எச்., மூலம் வெளியிடப்படுவதாகக் கூறுவதில் உண்மை இல்லை. இப்படம் குறித்து, கமல் மற்றும் அலுவலகம் மூலம் வெளியிடப்படும் தகவல்கள் மட்டுமே, உறுதியானவை. மற்றவர்கள் யார் எதை சொன்னாலும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.