தொடர்ந்து குத்து பாடல் வாய்ப்பு - மறுக்கும் தமன்னா | உண்மையிலேயே பஹத் பாசிலுக்கு தான் அந்த தைரியம் உண்டு : நடிகை ஊர்வசி புகழாரம் | கமலுக்கான கதையை மோகன்லால் - மம்முட்டி படத்திற்கு பயன்படுத்தவில்லை : இயக்குனர் விளக்கம் | மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | பெஞ்சல் புயல் : ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் | சூர்யா 45வது பட படப்பிடிப்பில் இணைந்தார் த்ரிஷா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம் | 'ஒரு பெண் போல சண்டை செய்' - சமந்தாவின் பதிவு யாருக்காக? | தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த 'அமரன்' | புஷ்பா 2 பட குழுவுக்கு நன்றி தெரிவித்த சாம் சி.எஸ் |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய படம் ‛விடாமுயற்சி'. நாயகியாக திரிஷா நடிக்கிறார். பிரியா பவானி சங்கர், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. முழுக்க முழுக்க ஆக் ஷன் கதையில் தயாராகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.
இந்நிலையில் அஜர்பைஜான் நாட்டில் நடிகர் அஜித்தை நடிகை பாவனா சந்தித்து பேசி உள்ளார். கன்னட படம் ஒன்றுக்காக பாவனா உட்பட அவரது குழுவினர் அஜர்பைஜான் நாட்டில் தான் முகாமிட்டுள்ளனர். அப்போது ஓட்டலில் பாவனா உள்ளிட்ட குழுவினர் அஜித்தை சந்தித்து பேசினர். இதுதொடர்பான போட்டோ, வீடியோ வலைதளத்தில் வைரலானது.
சரண் இயக்கத்தில் அஜித் நடித்த ‛அசல்' படத்தில் பாவனாவும் ஒரு நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.