'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கோமதி துரைராஜ் தயாரிப்பில் ஷார்ட் பிளிக்ஸ் வெளியீடாக உருவாகி உள்ள படம் 'நவயுக கண்ணகி'. அறிமுக இயக்குனர் கிரண் துரைராஜ் இயக்கி உள்ளார் . படத்தின் மைய கதாபாத்திரத்தில் பவித்ரா தென்பாண்டியன் நடிக்க, முக்கிய வேடங்களில் விமல் குமார், டென்சில் ஜார்ஜ், தென்பாண்டியன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாடல்களுக்கு ஆல்வின் இசை அமைத்துள்ளார். கெவின் பின்னணி இசையமைத்துள்ளார். தர்மதீரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. தனது காதலனை ஆணவ கொலை செய்த தன் குடும்பத்தை ஒரு பெண் புதுமையான ஒரு வழியில் பழிவாங்கும் கதை.
படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் இயக்குனர் கிரண் துரைராஜ் பேசியதாவது: நான் பெங்களூருவை சேர்ந்த தமிழன். எந்த ஊரில் தமிழர்கள் இருந்தாலும் அங்கே அவரவர்க்கு என ஒரு ஜாதி அமைப்பு இருக்கும். நானும் ஒரு ஜாதியை சேர்ந்தவன்தான். அங்கே இருக்கும்போது இது பற்றி ஒன்றும் தெரியவில்லை. அங்கே வெறும் கன்னட தமிழர் வித்தியாசம் மட்டும்தான். அங்கிருந்து இங்கே வந்து பார்க்கும்போது தான் ஜாதியை உணர்ந்தேன்.
சினிமாவுக்காக சென்னை வந்தபோது, இங்கே.. சென்னையில் ஜாதி பார்க்கிறார்கள் என்று சொல்ல மாட்டேன். ஆனால் சினிமாவில் ஜாதி பார்க்கிறார்கள். 5 நிமிடத்திலேயே நம் ஜாதி என்ன என்று நம்மிடமே போட்டு வாங்கும் விதமாக பேசுவார்கள். எனக்கு என் ஜாதியை சொல்ல வேண்டுமா வேண்டாமா என்று கூட தெரியாது. என் ஜாதியை கண்டுபிடித்தவர்கள் அந்த கோணத்திலேயே என்னை சித்தரிக்க துவங்கினார்கள். அதனால்தான் ஜாதி பிரச்னையை என்னுடைய முதல் படமாக நினைத்தேன். இனி அடுத்து நான் எடுக்கும் படங்களில் கூட என் வாழ்க்கையில் பாதித்த நிஜ விஷயங்களைதான் இருக்கும். என்றார்.