பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
அப்பா கஸ்தூரிராஜா, அண்ணன் செல்வராகவன் வழியில் நடிகர் தனுஷ், 'பவர் பாண்டி' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அவர் இயக்கிய முதல் படமே வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து பல ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்த அவர் தற்போது தனது 50வது படத்தை இயக்கி முடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் தனுஷ் தனது 3வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். படத்திற்கு 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 'வழக்கமான காதல் கதை' என்ற டேக் லைன் கொடுக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார், லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவும், தாய் விஜயலட்சுமியும் இணைந்து வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார்கள். பவிஷ், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், ராபியா, ரம்யா, வெங்கி ஆகியோர் நடிக்கிறார்கள். ரொமான்ட்டிக் காதல் கதை என்கிற ஜார்னரில் படம் உருவாகிறது.