மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விஸ்வரூபம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் விஸ்வரூபம்-2 ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. கமல்ஹாசனே நடித்து, இயக்கி, தயாரித்த மெகா பட்ஜெட் படம் விஸ்வரூபம். இப்படத்தில் கமலுடன் ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், ராகுல் போஸ் உள்ளிட்டவர்கள் நடித்து இருந்தனர். பல்வேறு பிரச்னைகள், தடைகள் பல கடந்து இப்படம் ரிலீஸ் ஆனது. படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வசூலையும் வாரி குவித்தது.
விஸ்வரூபம் படம் முடியும்போதே அதன் இரண்டாம் பாகம் வெளிவருகிறது என்று கமல் படத்தில் தெரிவித்து இருந்தார். முதல்பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். அதன்படி விஸ்வரூபம்-2-க்கான வேலையையும் படுவேகமாக தொடங்கினார் கமல். ஏற்கனவே விஸ்வரூபம் முதல்பாகத்தின் ஷூட்டிங் எடுக்கப்பட்டபோதே இரண்டாம் பாகத்துக்கான பாதி ஷூட்டிங்கை முடித்துவிட்டார் கமல். எஞ்சியுள்ள படக்காட்சிகளையும் வேகமாக படமாக்கி வருகிறார்.
இந்நிலையில் விஸ்வரூபம் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 15ம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதுகுறித்து இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் வி.டி.வி கணேஷ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, விஸ்வரூபம் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளோம். இம்முறை 3000க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய உள்ளோம், படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.50 கோடி என்றும், முதல்பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியாவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.