'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
2023ம் வருடத்தின் கடைசியில் இரண்டு படங்கள் இந்தியா முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. டிசம்பர் 21ம் தேதி ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாரூக்கான், டாப்சி, பொமன் இரானி மற்றும் பலர் நடித்துள்ள 'டங்கி' படம் வெளியாக உள்ளது. ஆனால், இந்தப் படத்தை ஹிந்தியில் மட்டுமே வெளியிட உள்ளார்கள். இப்படத்திற்காக வெளியிடப்பட்ட நான்கு டிரைலர்களுக்கும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
'முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே' ஆகிய படங்கள் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடமும் நன்றாக அறிமுமாகனவர் ராஜ்குமார் ஹிரானி. இவரும் ஷாரூக்கும் முதன் முதலாய் கூட்டணி சேரும் படம் என்பதாலும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த ஆண்டில் ஷாரூக் நடித்து வெளிவந்த 'பதான், ஜவான்' படங்கள் 1000 கோடி வசூலைக் கடந்தது. இந்தப் படம் மூலம் ஹாட்ரிக் வெற்றி மட்டுமல்லாது ஆயிரம் கோடி வசூலையும் ஷாரூக் புரிந்து புதிய சாதனை படைப்பாரா என பாலிவுட் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
டிசம்பர் 22ம் தேதி 'சலார்' படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. பிரசாந்த் நீல், பிரபாஸ் கூட்டணியின் முதல் படம். 'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவர உள்ள படம். 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பெரிய வரவேற்பை பிரபாஸ் பெறவில்லை என்ற வருத்தத்தை 'சலார்' படம் போக்குமா என்று அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.
மீண்டும் ஒரு ரவுடியிசக் கதையைத்தான் பிரசாந்த் கொடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் பிரபாஸ் நடிப்பதால் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் நிறைய வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு 1000 கோடி, பிரம்மாண்ட வெற்றி கிடைக்கும் என பிரபாஸ் காத்திருக்கிறார்.
அடுத்த வாரம் இந்த இரண்டு படங்கள் தமிழகத்திலும் பல தியேட்டர்களில் வெளியாக உள்ளதால், நேரடி தமிழ்ப் படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது.